எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற சென்னை பல்கலைக் கழகத்தின் வைர விழா ஆண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், மாணவர்களிடையே பேசும் போது, வரலாற்றின் பக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகத்தினரை அதை படிக்க வைப்பது நமது கையில்தான் உள்ளது என்றார். அவர் கூறிய அந்த நிலையை அடைய வேண்டுமென்றால், முதலில் நமக்கு திடமான லட்சியம் வேண்டும். அதை அடையக்கூடிய அறிவைத் தேடிப் பெற வேண்டும். அதற்கு கடின உழைப்பு வேண்டும். பிரச்சனைகளை கண்டு பயப்படக்கூடாது. பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். விடா முயற்சி வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக நல்ல ஒழுக்கம் வேண்டும். குடும்பத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நல்லதொரு அங்கமாக இருப்பேன் என்ற உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும்.
நீங்கள் அனைவரும் சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக இருக்க வேண்டும். ஏட்டுக் கல்வி மட்டுமே வாழ்க்கைக்கு போதாது. அத்துடன் பொது அறிவையும், சமயோசித அறிவையும் வளர்த்துக் கொண்டால்தான் வாழ்க்கையில் உண்மையிலேயே வெற்றி பெற முடியும். தான் படித்த கல்வியை சமயோசித முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறும் வகையில் மாற்றியமைத்துக் கொண்டு, மாணவர்கள் செயல்பட வேண்டும்.
எதிர்கால தலைமுறையினரும் பேசக் கூடிய வகையில் நீடித்த சீர்திருத்தங்களை கல்வித் துறையில் நடைமுறைப்படுத்த அம்மாவினுடைய அரசு உறுதி பூண்டுள்ளது. தரமான கல்வி நிறுவனங்கள் மூலம் மனித வள மேம்பாட்டை ஊக்குவித்து, உயர்தரம் வாய்ந்த கல்வியாளர்களை உருவாக்குவதும், தமிழ்நாட்டை கல்வியின் ஒரு பன்னாட்டு மையமாக உருவாக்குவதும் அம்மாவின் அரசின் லட்சியம்.
சென்னை பல்கலைக் கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது. அந்த வகையில், இப்பல்கலைக் கழகத்தின் 160-ம் ஆண்டு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றினை குறிக்கும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். இந்த மையத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் முன்னோடி திட்டங்களான சத்துணவு திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை பல்கலைக் கழகத்தில் உள்ள நூலக கட்டிடம், மணிக்கூண்டு கட்டிடம், ஓரியண்டல் கல்வி நிறுவன கட்டிடம் மற்றும் நூற்றாண்டு கட்டிடம் ஆகிய புராதன கட்டிடங்களை தொன்மையை பாதுகாத்து பழுது பார்த்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். இந்த மாணவச் சமுதாயம் நாளைய இந்தியாவை, தமிழகத்தை ஆளக்கூடிய சமுதாயம். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கக்கூடிய வயது உங்களுடைய வயது. இந்த வயதில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய நிலையிலே நீங்கள் இருக்கின்றீர்கள். பிற்காலத்திலே உங்களுடைய வாழ்க்கை சிறக்க வேண்டுமென்று சொன்னால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.