முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிக் பெண்ட்

துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா உலகின் உயர்ந்த கட்டிடமாக இருக்கிறது. தற்போது, சுமார் 1,220 மீட்டர் உயரத்திலான கட்டிடம் ஒன்றை நியூயார்க்கில் வடிவமைக்க உள்ளனர். இதன் உயரத்தை விட மிக பெரிய சாதனை என்னவென்றால், இது தலைகீழான U வடிவில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்துக்கு பிக் பெண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 7.5 செமீ நகரும் ஹவாய் தீவுகள்

புவியியல் படித்தவர்களுக்கும், கொஞ்சம் பொது அறிவு படைத்தவர்களுக்கும் இந்த கண்டங்கள் எவ்வாறு உருவாகின என தெரிந்திருக்கும். அவை மெல்ல மெல்ல நகர்ந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும், ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தும் கண்டங்களும் தீவுகளும் உருவாகின. உருவாகி வருகின்றன. இது புவியியலின் இயற்கை. இதில் பசிபிக் கண்டத்திட்டில் அமைந்துள்ள ஹவாய் தீவுகள் ஆண்டுதோறும் நகர்ந்து வருகின்றன. அவை வடமேற்காக நகர்ந்து அமெரிக்க கண்டத்திட்டில் அமைந்துள்ள அலாஸ்காவை நோக்கி நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆண்டு தோறும் சுமார் 7.5 செமீ தூரம் நெருங்கி வருவதும் தெரியவந்துள்ளது. கண்டங்கள் பிரிவதும், இணைவதும் பல லட்ச ஆண்டுகள் செயல்பாடு என்றாலும் நகர்வது என்பது ஆச்சரியம் தானே..

பிரபலமான பீட்டில்ஸ் இசை குழுவினருக்கு இசை தெரியாது

உலக அளவில் புகழ் பெற்ற இசைக்குழுவினர்களில் பீட்டில்ஸ் குழுவினருக்கு முதலிடம் உண்டு. ராக் இசை குழுவினரான இவரது பாடல்கள் ஒரு காலத்தில் இசை ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து கொண்டிருந்தது. உலகம் முழுவதும் தங்களது இசைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மயங்க வைத்தனர். ஆனால் இந்த குழுவில் உள்ள யாரும் முறைப்படி இசை கற்றுக் கொண்டது கிடையாது. இசையை எழுதவோ, படிக்கவோ அவர்களுக்கு தெரியாது.  இதை அக்குழுவில் உள்ள முக்கிய இசைஞர் பால் மெக்கார்டினி கடந்த 2018இல் ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். எங்கள் கற்பனையில் தோன்றியதை மட்டுமே நாங்கள் பாடி வந்தோம். இதை கேட்டு இசை ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

பீர் பாட்டில்

செவ்வாயில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை, நாசா விஞ்ஞானிகள் மேற்கொற்கொண்டு வரும் நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் மது பாட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த மது பாட்டில் புகைப்படம், கடந்த 2007-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாம்.

இரும்பு மழை பெய்யும் கோள்

வாஸ்ப் – 76பி என்ற ஒரு புத்தம் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில்  இரும்பு மழை பெய்கிறது என்பதை விண்வெளி அறிஞர்கள் கண்டு வியந்திருக்கிறார்கள்.வாஸ்ப் 76பி என்று அறியப்படும் இந்த கோள், அதனுடைய நட்சத்திரத்தை சுற்றி வரும்போது, அதன் பகல் பகுதி வெப்பநிலை 2,400 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கிறது. இந்த வெப்பநிலை உலோகங்களை ஆவியாக்கும் ன்மை கொண்டது. இரவு நேரப் பகுதியில் இந்தக் கோளின் வெப்பநிலை 1400 டிகிரியாக குறைந்துவிடுகிறது. இந்த வெப்பநிலையில், பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பெய்கின்றன.ஜெனீவாவை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் டேவிட் ஹெரேயின்ச்  கூறுகையில்,  தண்ணீர் துளிகளுக்கு பதிலாக இரும்பு துளிகளின் சாரல் அடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்றார்.நேச்சர் என்ற சஞ்சிகையில் இந்த கோள் குறித்த கண்டுபிடிப்புகளை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மற்றொறு கோள்

சூரியக்குடும்பத்தில் இதுவரை 9 கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதி இல்லை எனக்கூறி அது நீக்கப்பட்டது.  இந் நிலையில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த விண்பொருளின் காந்த விசையை பொருத்தே அது கோளா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago