முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மணல், sand

பீச்சுக்குப் போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடுவோம் இல்லையா? இப்படி விளையாடும்போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா..  கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம். அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்த படி கரையில் உள்ள கற்களையெல்லம் அரித்துக் கொண்டே இருக்கின்றன. சிறு சிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன. இப்படிக் கற்கள் மோதிக்கொள்ளும் போது மாவரைக்கும் இயந்திரத்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.

காந்தியின் அஸ்தி அமெரிக்காவில் பாதுகாக்கப்படுகிறதா? - தொடரும் சர்ச்சை

அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டில் இருந்து சில நிமிடங்களில் அடைகிற தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற சன்செட் பொலிவார்டில் உள்ள ஏரி ஆலயத்தில் அமைந்திருக்கிறது காந்தி உலக அமைதி நினைவகம். இந்த ஆலயத்தின் நிறுவனர் பரமஹம்ச யோகானந்தா. இது 1950ல் கட்டப்பட்டது. இந்த இடத்தில் சீனாவில் இருந்து வந்த பழமையான கல் பெட்டியில் ஒரு வெள்ளிப் பேழையும், ஒரு வெண்கலப் பேழையும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேழைகளில்தான் காந்தியின் அஸ்தி இருப்பதாக கூறப்படுகிறது. 1948ல் காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, அவரது அஸ்தி 20 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல பாகங்களுக்கு மக்கள் நினைவுக்கூட்டங்கள் நடத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றில் சில பாகங்கள் எப்படியோ வெளிநாடு கொண்டுசெல்லப்பட்டுவிட்டது. தற்போது அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து நதி தீரத்தில் கரைக்க வேண்டும் என காந்தியின் பேரனான துஷார் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர். இது எவ்வாறு அமெரிக்காவுக்கு சென்றது என்பது மர்மமாக உள்ளது என காந்தி குடும்பத்தினர் கூறுகின்றனர்.

நடன ஆசிரியை

சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சூப்பர் ஃபாஸ்ட்

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கேமராக்களை விட பல லட்சம் மடங்கு வேகமான கேமராவான 15 ஃபான்டம் ஃபிளெக்ஸ் போன்று ஸ்லோ-மோ கேமரா ஆகும். இதை கொண்டு ஒளியின் பயணத்தையும் துல்லியமாக படமாக்க முடியும். ஸ்வீடன் நாட்டின் லண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்களை படமாக்கும் கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இது சரியாக வெவ்வேறு ஃபிரேம்களை படமாக்காமல் ஒவ்வொரு ஃபிரேம்களில் இருந்தும் வெவ்வேறு புகைப்படங்களை பிரித்து எடுக்கும். அதாவது கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் போது வெவ்வேறு லேசர் மின்விளக்குகள் பொருளின் மீது பாயும். இவ்வாறு பாயும் போது ஒவ்வொரு லேசர் பிளாஷூம் விசுவல் முறையில் கோடிங் செய்யப்பட்டு, பின் மற்ற தகவல்களை டீக்ரிப்ஷன் மூலம் பிரித்து எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதன் முதலில் எடுத்த புகைப்படத்தை புரொசஸ் செய்ய எவ்வளவு நேரமானது தெரியுமா?

Nicéphore Niépce என்பவர் எடுத்த புகைப்படம் தான் உலகின் முதல் புகைப்படம் என்று சொல்லப்படுகிறது. இந்த புகைப்படத்தை அவர் எடுத்து அதை புரொசஸ் செய்வதற்கு மட்டும் 8 மணி நேரம் பிடித்துள்ளது. அப்போதைய கையால் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்கள் காரணமாக இத்தனை மணி நேரமானது. மேலும் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கும் நீண்ட நேரமானது. எனவேதான் பண்டைய காலங்களில் புகைப்படத்துக்கு நீண்ட நேரம் போஸ் கொடுக்க வேண்டியிருந்ததால், பெரும்பாலும் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் சிரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏனெனில் அவர்கள் நீண்ட நேரம் அசையாமல் இருக்க வேண்டும் அல்லவா. அது சரி முதலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்துக்கு என்ன டைட்டில் தெரியுமா  "லே கிராஸில் ஜன்னல் வழி தெரியும் காட்சி" என்பதாகும்.

இப்படியும் வினோதம்

அயர்லாந்தில் உள்ள கில்லோர்லின் நகரில், நாட்டின் ராஜாவாக, ஆட்டுக்கு முடிசூட்டியுள்ளனர். அங்கு பழமையான திருவிழாக்களில் ஒன்றான பக்ஃபேர் பண்டிகையின் போது, ஒரு ஆட்டைப் பிடித்து, அதனை நகரம் முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். அதன்பின் அந்த ஆட்டிற்கு ராஜாவாக முடிசூட்டுவார்களாம். திருவிழா முடியும் வரை அந்த ஆடுதான் அரசனாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago