முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ் தாத்தாவை கண்டுபிடிக்க தனி இணையதளம் உருவாக்கிய அமெரிக்க ராணுவம்

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்: கிறிஸ்துமஸ் தாத்தா எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்கும் இணையதளம் அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

1995ல் நடந்த ஒரு நிகழ்வின் காரணமாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா எங்கு இருக்கிறார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். உலகத்தில் இருக்கும் பலரும் இந்த இணையதளத்தை தேடி பார்த்து வருகின்றனர். இந்த இணையதள உருவாக்கத்திற்கு பின்பு நெகிழ்ச்சியான கதை ஒன்று இருக்கிறது. தற்போது இந்த இணையதளம் உலகம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.

அமெரிக்காவின் விமான படை தற்போது 'www.noradsanta.org' என்ற இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த இணையதளம் 3டி தொழிநுட்பத்தில் இயங்க கூடியது. இதில் கிறிஸ்துமஸ் தாத்தா எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கலாம். எந்த நாட்டிற்கு எல்லாம் சென்று இவர் பரிசுகளை தருகிறார் என்றும் பார்க்கலாம். இது முழுக்க முழுக்க விமானப்படையின் ரேடாரை கொண்டு அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அந்த இணையத்தில் இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மீது கிளிக் செய்யும் போது அவர் எங்கே இருக்கிறார், எவ்வளவு பரிசுகளை கொடுத்து இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த இணையம் உலகம் முழுக்க ஹிட் அடித்து இருக்கிறது. இந்த இணையத்தில் இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையானவர் இல்லை என்றாலும் பலரும் இதை விரும்புகிறார்கள். முக்கியமாக சிறுவர்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இவங்கா டிரம்ப் ஆகியோர் கூட இதில் ஒருநாள் கிறிஸ்துமஸ் தாத்தாவாக செயல்பட்டனர். அழகிய வரலாறு இந்த இணையத்திற்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது. 1955ல் கிறிஸ்துமஸ் தாத்தாவின் தொலைபேசி எண் என நினைத்துக் கொண்டு சிறுமி ஒருவர் அமெரிக்க விமான படைக்கு கால் செய்து இருக்கிறார். பேப்பர் விளம்பரத்தை பார்த்துவிட்டு இந்த காலை அவர் செய்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் ஆசையை விமான படை தளபதி நிறைவேற்றி இருக்கிறார். அதில் இருந்தே இந்த திட்டம் உருவாக்கப்பட்டு, இணையதளம் எல்லாம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து