முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தியாவில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய சுகாதார துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து நடத்திய காசநோய் ஒழிப்பு மாநாட்டில் பேசினார்.

மத்திய அரசு திட்டம்

டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி இம்மாநாட்டை துவங்கி வைத்தார். உலக தலைவர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் ‘காசநோய் இல்லாத இந்தியா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

இந்தியாவில் வரும் 2025- ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்பதே தேசியளவிலான குறிக்கோள். மேலும் உலகளவில் காசநோயை 2030-ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு 5 வருடங்கள் முன்பாகவே இந்தியாவில் காசநோய் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளாக காசநோய்க்கு எதிராக பல திட்டங்கள் வகுத்தும் இதுவரை நல்ல பலன்கள் கிடைக்கவில்லை. அதனால் நிலைமையை மேலும் தீவிரமாக ஆராய்ந்து புதிய அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

மாநில அரசுகளுக்கு ...

இந்த தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே இந்த திட்டத்தில் சேரும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2.8 மில்லியன் பேர் காசநோயால் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் இறக்க நேரிடுகிறது. காசநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களே. எனவே காசநோய் ஒழிப்பதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவ வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து