முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத்தின் அடையாளமாக மாறிய மேக் இன் இந்தியா திட்டத்தால் இந்தியாவுக்கு பெரிய முன்னேற்றம் பிரதமர் மோடி பெருமிதம்

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ,உலக அடையாளமாக மாறியுள்ள மேக் இன் இந்தியா திட்டத்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளது என்றும், டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியாவின் தரம் உயர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஜப்பான் இடையிலான 13-வது வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார். பின்னர், டோக்கியோ நகரில் நடைபெற்ற நிகழ்வில், ஜப்பான் வாழ் இந்தியர்களிடம் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, கிரிக்கெட், இந்திய கலாச்சாரம், இந்திய உணவுகளை ஜப்பானுக்கு கற்றுக் கொடுத்த இந்தியர்கள், உலகின் ஒவ்வொரு மூலைக்கும் தீபாவளி பண்டிகையின் போது தோன்றும் வெளிச்சம் போல உலகெங்கும் பரவி இருக்கிறார்கள்.தற்போது, இந்தியா டிஜிட்டல் கட்டமைப்பில், உலகளவில் பல முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகிறது. அதே போல, மேக் இன் இந்தியா திட்டம் உலக அடையாளமாக மாறியுள்ளது. சர்வதேச மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. செல்போன் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. மனிதகுலத்திற்கான சேவைக்காக இந்தியாவின் முயற்சிகளை, சேவைகளைக் கண்டு உலமே பாராட்டுகிறது.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை முன்மொழிந்த மோடி, 2022-ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர் அனுப்பும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். கடந்த ஆண்டு நமது விஞ்ஞானிகள் 100 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தனர். சந்திரயான் மற்றும் மங்கல்யான் செயற்கைக்கோள்களை மிகக் குறைந்த செலவில் உற்பதத்தி செய்து அனுப்பினோம். 2022 ஆம் ஆண்டுக்குள் ககனயனை விண்வெளிக்கு அனுப்புவதற்கு இந்தியா தயாராகி வருகிறது. இது அனைத்து பணிகளிலும் இந்தியர்களே ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து