முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணினி கண்காணிப்பு விவகார வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

10 அமைப்புகளுக்கு...

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள தகவல்களை கண்காணிக்க, நுண்ணறிவு பிரிவு(ஐ. பி.), அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ரா விசாரணை அமைப்பு, டெல்லி காவல் துறை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பு ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அனுமதி அளித்து இருந்தது.

ஒத்துழைக்க வேண்டும்...

அந்த அனுமதியின்படி, நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை கண்காணிப்பது, கணினிகள் மூலம் பரிமாறப்படும் தகவல்களைத் தெரிந்து கொள்வது, அனுப்பப்படும் தகவல்களை இடைமறிப்பது, தகவல்கள் அனுப்புவதை தடை செய்வது, அந்த தகவலின் உண்மைத் தன்மையை ஆராய்வது உள்ளிட்ட பணிகளை விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளலாம். இந்த விசாரணை அமைப்புகளுக்குத் தேவைப்படும் நேரத்தில், தகவல் தொடர்பு சேவையாளர், பயன்பாட்டாளர் மற்றும் கணினியின் உரிமையாளர் ஆகியோர் அனைத்துவித தொழில்நுட்ப வசதிகளையும் செய்து தந்து ஒத்துழைக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு...

அவ்வாறு ஒத்துழைக்க மறுத்தால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அனுமதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து