முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 187 ரன்னில் சுருண்டது

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஆண்டிகுவா : ஆண்டிகுவா டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 187 ரன்னில் சுருண்டது.

முதல் டெஸ்டில் வெற்றி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பிரிட்ஜ் டவுனில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 381 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் நேற்று முன்தினம் ஆண்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.

93 ரன்னுக்குள்...

93 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் மொயீன் அலி தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடித்தார். இங்கிலாந்து 61 ஓவரில் 187 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. மொயீன் அலி 60 ரன்னும், பேர்ஸ்டோவ் 52 ரன்னும், போக்ஸ் 35 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், ஜோசப் 2 விக்கெட்டும், ஹோல்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து இருந்தது. பிராத்வைட் 11 ரன்னுடனும், கேம்பல் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து