கார் விபத்து: டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்தார் இளவரசர் பிலிப்

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      உலகம்
Prince Philip car crash 2019 02 10

லண்டன் : இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் விபத்தை ஏற்படுத்தியதால், தனது டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்துள்ளார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப், ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயம் அடைந்தார்.

இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். இந்நிலையில், இளவரசர் பிலிப் தனது டிரைவிங் லைசென்சை காவல் நிலையத்தில் திருப்பி அளித்துள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மணை தெரிவித்துள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து