முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு: குமாரசாமியின் முடிவுக்கு எடியூரப்பா வரவேற்பு

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமி கேட்டுக் கொண்டதை அம்மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா வரவேற்றுள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் தனது அரசு வெற்றி பெறும் என முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்கும்படி சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் குமாரசாமியின் இந்த முடிவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில பா.ஜ.க. தலைவருமான எடியூரப்பா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-ஊழல் மற்றும் பயனற்ற கூட்டணி அரசால் கர்நாடக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதன் காரணமாகத்தான், இரண்டு கூட்டணி கட்சிகளில் இருந்தும் பல எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபையில் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரியிருக்கிறார். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எப்படியும் அடுத்த சில தினங்களில் இந்த அரசு கவிழும். மெஜாரிட்டியை இழந்து விட்ட பிறகும், குமாரசாமி அரசியல் சதியை தூண்டி விடுகிறார். எந்த அர்த்தமும் இல்லை என்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கேட்கிறார். இது பா.ஜ.க.வுக்குத் தான் பயனளிக்கும். கூட்டணி அரசை காப்பாற்றுவதில் அவர் வெற்றி பெற மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து