முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தம்: பாகிஸ்தான்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத் : காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள பாகிஸ்தான் சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கிறது. இதற்கு பாகிஸ்தான் ஏற்கனவே கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியது. மேலும், இரு தரப்பு இடையேயான வர்த்தக உறவையும் முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்த நிலையில், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து, பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது. மேலும், 1994-ம் ஆண்டு முதல், வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து