முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு - மத்திய அரசு பரிந்துரை

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் உடனடியாக இந்த திட்டம் அமலுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மத்திய அரசு சார்பில் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய சமுதாய உதவி திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த உதவிகளை ஊரக அமைச்சகம் வழங்கி வருகிறது.

அதன்படி மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.500 வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் இந்த உதவி தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 79 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் இனி ரூ.500 கிடைக்கும்.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் உடனடியாக இந்த திட்டம் அமலுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று திறனாளிகள், விதவைகள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உதவி தொகைகள் உயர்த்தப்பட உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 3 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள். .

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து