முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      விளையாட்டு
24-Ram-50

Source: provided

சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.

40 லீக் ஆட்டங்கள்...

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 39 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.  இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதல் 4 இடங்களில்... 

இந்த தோல்வியின் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த சென்னை 5-வது இடத்திற்கு சரிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் கண்டு 8 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து சென்னை, தனது அடுத்த போட்டியில் வரும் 28-ம் தேதி ஐதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. தற்போது வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

பெங்களூரு கடைசி...

இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ளது. சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 5, 6-வது இடங்களில் உள்ளன. பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து