முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      இந்தியா
Fisher-Man 2023-11-09

Source: provided

கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கையிலிருந்து 5 இந்திய மீனவர்கள், இந்தியா திரும்புவர் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. இந்த மாத தொடக்கத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.

இந்தியா - இலங்கை இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், இலங்கை பிராந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக தெரிவித்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வருடம் இதுவரை இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் கூறப்படும் 23 இழுவை படகுகள் உள்பட 178 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

கடந்த ஆண்டு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக 240 இந்திய மீனவர்களையும், 35 இழுவைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து