முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்பத்திரியில் அமர்சிங்: சிறை அதிகாரிகளுக்கு கோர்ட் கேள்வி

வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.- 15 - ஆஸ்பத்திரியில் அமர்சிங்கை அனுமதித்தது ஏன் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு டெல்லி கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் ராஜ்யசபை உறுப்பினருமான அமர்சிங் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திகார் சிறை அதிகாரிகள் அனுமதித்தனர். அமர்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அமர்சிங்கை ஏன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதற்கான காரணத்தை கூறும்படி திகார் சிறை அதிகாரிகளுக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது அமர்சிங்கின் உடல் நிலை குறித்தும் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை குறித்தும்,சிகிச்சை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும்படி எய்ம்ஸ் டாக்டர்களுக்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்