முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மபுத்திராவில் அணை: மின் உற்பத்தியை தொடங்கிய சீனா

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

திபெத் - தீபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி மின் உற்பத்தியை தொடங்கியது சீனா.
2900 கி.மீ. பாயும் பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் இமயமலை பகுதியில் உற்பத்தியாகி இந்தி யாவில் அசாம், அருணாசலப் பிரதேசத்திலும், அண்டை நாடான வங்கதேசத்திலும் பாய்கிறது. நாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் பிரம்மபுத்திரா அழைக்கப்படுகிறது.
இதனிடையே திபெத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி நீர் மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த சீனா முடிவு செய்தது. இதன்படி முதல் நீர் மின்நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
பிரம்மபுத்திராவில் சீனா அணைகளை கட்டினால், இந்தியா வுக்கு வரும் தண்ணீரின் அளவு பெருமளவில் குறையும் என்பதால் இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் அதனை கண்டுகொள்ளாமல் சீனா தனது நீர் மின் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.
இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹு சென்யிங், திபெத்தின் ஷாங்மு பகுதியில் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடை காலத்தில் திபெத்தின் மின் தேவை முழுமை யாக பூர்த்தி செய்ய முடியும்.
இந்த நதியால் பயனடையும் பிற நாடுகளையும் கணக்கில் கொண்டே இத்திட்டத்தை செயல் படுத்தியுள்ளோம். எங்கள் மின் திட்டங்களால் அந்நாடுக ளுக்கு பாதிப்பு ஏற்படாது. இந்தியாவு டனான உறவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து