முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் அஞ்சலி

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

காட்மண்டு - மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 6-வது ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தீவிரவதிகளுடனான சண்டையில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
கடந்த 2008-ம் ஆண்டு இதே நாளில் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலை நினைவு கூர்கிறேன். அந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்த பெண்கள், குழந்தைகள், ஆண்கள் அனைவருக்கும் எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
இத்தாக்குதலில் தீவிரவாதிகளுடன் தைரியமாக சண்டையிட்டு அவர்களை வீழ்த்திய வீரர்களுக்கு மரியாதை தெரிவிக்கிறேன். அந்தப் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். அவர்களே நிஜமான ஹீரோக்கள்.
இந்தநாளில், தீவிரவாதத்தை வேரறுக்க நாம் மீண்டும் உறுதி எடுத்துக் கொள்வது அவசியமாகும், என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறும் 18-வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து