முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது: பிரதமர் மோடி வழங்கி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

சென்னை: ஊராட்சிகளை வலுப்படுத்தி மின் ஆளுகை திட்டங்களை சிறப்பாக கையாண்டதற்காக தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை பிரதமர் மோடியிடமிருந்து தமிழக அரசின் சார்பில் உள்ளாட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் பேடி பெற்றுக்கொண்டார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பானநிர்வாகத்திற்காக ஊராட்சி கணக்குகளை கண்காணிப்பதற்கான கணக்கீட்டு மென்பொருள் (பிரியாசாப்ட்) உள்ளாட்சி அமைப்புகள் விவர தொகுப்பு (எல்.ஜி.டி), ஊராட்சிகளுக்கான தேசியவலைத் தளம், தேசிய அளவிலான ஊராட்சி சொத்துக்கள் விவர தொகுப்பு மற்றும் ஊராட்சிஅளவில் திட்டமிடலுக்கான பிளான் பிளஸ் ஆகிய மின்னணு ஆளுகை மென்பொருட்களைஉருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் மேற்கண்ட மின்னணு ஆளுகைதிட்டங்களை செவ்வனே செயல்படுத்தும் பொருட்டு ரூ.79.50 கோடி செலவில் கணிப்பொறி, மின்னாக்கி, பிரிண்டர் மற்றும் அகண்ட வரிசை இணையதள இணைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஆளுகை திட்டங்களை சிறப்பா செயல்படுத்தும் மாநிலங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இ-பஞ்சாயத்து புரஸ்கார விருது என்ற ஒரு விருதினை ஏற்படுத்தி ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2014-15-ம் ஆண்டில் மின்னணு ஆளுகை திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது மற்றும் ரூ.20 லட்சத்திற்கான ரொக்கப் பரிசினை தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கியுள்ளது. மேற்கண்ட விருதினை மாண்புமிகு பாரத பிரதமரிடமிருந்து திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அரசு செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, 24.4.2015-ம் நாள் புதன் டெல்லி விக்யான் பவன் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின மாநாட்டில் பெற்றார்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் திட்ட செயலாக்கம், நிர்வாகம், நிதி மற்றும் அதிக பரவலாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது என்ற ஒரு விருதினை உருவாக்கியுள்ளது. 2014-15ம் ஆண்டு மேற்கண்ட விருதினை பெற தமிடிநநாட்டைச் சேர்ந்த 6 கிராம ஊராட்சிகள், இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சி ஆகியவற்றை மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரொக்கப் பரிசாக ரூ.30 இலட்சம் மாவட்ட ஊராட்சிக்கும், ரூ.20 இலட்சம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் மற்றும் ரூ.8 இலட்சம் கிராம ஊராட்சிகளுக்கும் அந்தந்த ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வழங்கப்படுகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மாண்புமிகு மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடமிருந்து 24.4.2015-ம் நாள் புது டெல்லி விக்யான் பவன் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின மாநாட்டில் விருதினை பெற்றார்கள்.
கிராம சபையை சிறப்பாக நடத்தும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ராஷ்ட்ரிய கௌரவ் கிராம சபா விருது என்ற விருதினை 2012-ம் ஆண்டு முதல் உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்திலும் சிறந்த ஒரு ஊராட்சிக்கு விருதினை வழங்கி வருகிறது.

அதன்படி 2014-15-ம் ஆண்டில், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பெரஉறட்டி கிராம ஊராட்சி மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.10 இலட்சம் ரொக்கப் பரிசு பெறுகின்றது. மேற்கண்ட ராஷ்ட்ரிய கௌரவ கிராம சபா விருதினை மாண்புமிகு மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடமிருந்து திருமதி.மு.ராஜேஸ்வரி தேவதாஸ் 24.4.2015-ம் நாள் புது டெல்லி விக்யான் பவன் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின மாநாட்டில் விருதினை பெற்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து