முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமன் தலைநகரில் சவுதி போர் விமானங்கள் மீண்டும் குண்டுமழை

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

சானா - ஏமன் தலைநகர் சானா மீது சவுதி போர் விமானங்கள் மீண்டும் குண்டு மழை பெய்தன.ஏமன் நாட்டில் சிறுபான்மை ஷியா பிரிவினர் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்தி  வருகின்றனர். ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி பழங்குடியினர் நடத்தி வரும் இந்த உள்நாட்டு  போர் கடந்த ஒரு மாதமாக தீவிரமடைந்து வருகிறது. ஹவுதி  தாக்குதலை சமாளிக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாடி சவுதி அரேபியாவில்  தஞ்சம் அடைந்துள்ளார்.

சன்னி பிரிவை சேர்ந்த இவருக்கு இதே பிரிவை சேர்ந்த சவுதி  மன்னர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். மேலும் ஏமன் நாட்டினல் அதிபருக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் ராணுவத்துக்கு துணையாக சவுதி விமானப்படையையும் அனுப்பி உள்ளனர். கடந்த மார்ச் இறுதியில் ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி போர்  விமானங்கள் குண்டு வீச தொடங்கின. இதனால் பொதுமக்கள் கிளர்ச்சியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

பல ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். போர் நீடித்து வரும் காரணத்தால் அவர்களுக்கு  சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கமுடியவில்லை. போரை நிறுத்த ஐ.நா.விடுத்த  கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் சவுதி விமானங்கள் தாக்குதலை நிறுத்தின.கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தாவிட்டால் மீண்டும் குண்டுவீசுவோம் என சவுதி அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் ஏமன் தலைநகர் சானாவிலிருந்து எண்ணெய் கிணறுகள்  நிறைந்த மாரிப் பகுதிக்கு கிளர்ச்சியாளர்கள் படை நகர தொடங்கியது. இதை தொடர்ந்து சானாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் நிலைகள் மீது சவுதி போர் விமானங்கள் நேற்று முன்தினம் மீண்டும் குண்டு மழை பெய்தன. இதில் 90 பேர்  இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து