முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் பேட்மிண்டன் ஓபன்: காலிறுதியில் காஷ்யப் தோல்வி

வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ - ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண் டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் காலிறுதியில் தோல்வியடைந்தார்.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் காமன்வெல்த் சாம்பியனான காஷ்யப் 21-11, 21-19 என்ற நேர் செட்களில் உலகின் 4-ம் நிலை வீரரும், சகநாட்டவருமான காந்தை தோற்கடித்தார்.

இந்த ஆட்டத்தை முடித்த காஷ்யப், தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சீன தைபேவின் சவ் டியென் சென்னை நேற்று சந்தித்தார். சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் காஷ்யப், டியெனுடன் 3 முறை மோதி 2 முறை வெற்றி கண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் சீன தைபேவின் சவ் டியெனிடம் 14-21, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். இந்த போட்டியில் ஏற்கனவே இந்தியாவின் சாய்னா நெவால், காந்த் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்