Idhayam Matrimony

ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      விளையாட்டு
ICC 2023 06 24

Source: provided

துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

தலா 3 வீரர்கள்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் நமீபிய வீரரான எராஸ்மஸ், யு.ஏ.இ கேப்டனாக முகமது வாசிம் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாகீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வாசிம் - ஹேலி...

அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீஸ் கேப்டனான ஹேலி மேத்யூஸ் மற்றும் இலங்கை அணியின் கேப்டனான சமாரி அதபத்து ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் - வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது யு.ஏ.இ கேப்டன் முகமது வாசிமுக்கும், சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து