முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா சென்றார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா தெரிவிக்கையில்., தலைவர் சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

ஒரு வாரத்தில் இந்தியா திரும்புவார் எனக் கூறியுள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக அவர் மேற்கொள்ள வேண்டியிருந்த மருத்துவ பரிசோதனை தள்ளிப்போனதாகவும் அதனால் அவர் தற்போது பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்