முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 110 வீரர்கள் பங்கேற்பு: இந்திய அணியினரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து

திங்கட்கிழமை, 4 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, பிரேசில், ரியோ டிஜெனிரோ ஒலிம்பிக்கிற்கு இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடி டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததார்.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை உலக நாடுகள் கலந்து கொள்ளும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சர்வதேச விளையாட்டு விழாவில் இந்திய அணி ஏறக்குறைய 100 வீரர் -வீராங்கனைகளுடன் 13 பிரிவுப்போட்டிகளில் கலந்து கொள்கிறது.

ரியோ-டி-ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய அணியினரை பிரதமர் மோடி நேற்று தலைநகர் டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

வீரர்களை சந்திக்கும் விழா மானக்ஷா மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஒவ்வொரு வீரருடனும் தனிப்பட்ட முறையில் அவர்களது விளையாட்டு பற்றி பேசினார். மேலும் அவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிநேந்திர சிங், விளையாட்டுத்துறை செயலாளர் ராஜீவ் யாதவ், அகில இந்திய ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவர் விஜய் மல்கோத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய ஹாக்கி சங்க தலைவர் நரீந்தர் பத்ரா, ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் முகமது முஸ்தாக் அகமதுஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய அணி 83 வீரர்களை அனுப்பியிருந்தது. அந்த எண்ணிக்கையை விட தற்போது கூடுதலாக இந்திய அணியினர் ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்கள். வரவிருக்கும் நாட்களில் மேலும் பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்திய அணி 110 வீரர்களுடன் பிரேசில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் என இந்திய ஒலிம்பிக் சங்கமும்,  விளையாட்டுத்துறை அமைச்சகமும் எதிர்பார்க்கிறது. பிரதமருடன் சந்திப்பு நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் பிரதமருடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்