எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம். ஆனால், பயன்படுத்தப்பட்ட கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பலருக்கு பட்ஜெட் பிரச்சனை, அதன்பிறகு முதல் முறையாக பயன்படுத்திய கார் வாங்கி ஓட்டி பழகிய பின்னர் புதிய கார் வாங்கலாம் என்ற முடிவில் காரை வாங்கிவிடுவர். அதன்பின்னர், ஏற்படும் கசப்பான அனுபவங்களால் பயன்படுத்தப்பட்ட காரை ஏன் வாங்கினோம் என்று புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
ஆனால், தற்போது இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் 3 முதல் 5 ஆண்டுகளில் பழைய காரை மாற்றி புதிய கார் வாங்குவதால், யூஸ்டு கார்கள் மார்க்கெட்டில் சிறந்த முறையில் கிடைக்கின்றன. எனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் வைத்தால் இதுபோன்ற கசப்பான அனுபவங்களை தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.
பட்ஜெட் & கார் தேர்வு
பயன்படுத்தப்பட்ட காரை வாங்க முடிவு செய்தபின், பட்ஜெட்டிற்கும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் தகுந்த மாடலை தேர்வு செய்வது மிக மிக முக்கியம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஹேட்ச்பேக் கார் போதுமானது. அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்டவர்களுக்கு எஸ்.யூ.வி அல்லது எம்.பி.வி கார் மாடல்கள் பொருத்தமாக இருக்கும். அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் டிக்கி வசதி கொண்ட செடன் ரக கார்களை தேர்வு செய்யலாம்.
மார்க்கெட் நிலவரம்
நாம் வாங்குவதற்கு தேர்வு செய்துள்ள சில மாடல்களின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு செல்வதும் அவசியம். காரை தேர்வு செய்யும்போது அதன் விலையை மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆன்லைனில் இந்த விபரங்களை எளிதாக பெறும் வாய்ப்பு இருக்கிறது.
விற்பனையாளர் தேர்வு
பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, நல்ல அறிமுகமான விற்பனையாளர் அல்லது மார்க்கெட்டில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் நம்பகமான விற்பனையாளரை தேர்வு செய்வது உத்தமம். மாருதி, ஹூண்டாய் போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது பாதுகாப்பானது. மேலும், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சில நிறுவனங்கள் வாரண்டியும் தருகின்றன.
பைனான்ஸ்
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கடனுதவி அளிக்கின்றன. காருக்கு கடன் வாங்கும் முன் பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டிவிகிதங்கள், டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொண்டு, அதில் உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
டெஸ்ட் டிரைவ்
விற்பனையாளிரிடம் உள்ள கார்களில் உங்களுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்தவுடன், அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும். உங்களுக்கு கார் ஓட்டிய அனுபவம் இல்லையென்றால் கூட வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்த மெக்கானிக்குகள் மூலமாக காரை டெஸ்ட் டிரைவ் செய்து காரின் கன்டிஷனை தெரிந்து கொள்ளலாம். தவிர, கார் எத்தனை கி.மீ., தூரம் ஓடியிருக்கிறது, பாகங்களின் தேய்மானம், விபத்துக்களில் சிக்கிய காரா என்பது உள்ளிட்ட விபரங்களை கண்டிப்பாக அறிந்த பின்னரே வாங்க வேண்டும். முடிந்தால் உங்கள் குடும்பத்தினரை அதில் உட்கார வைத்து வசதியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துவிடுங்கள்.
காரின் ஜாதகம்
காரை தேர்வு செய்தபின், அதன் பதிவு புத்தகம் (ஆர்.சி.புக்), சாலை வரி செலுத்தியதற்கான ரசீது, இன்ஷ்யூரன்ஸ், ஒரிஜினல் இன்வாய்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால், கடன் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விட்டதா அல்லது தவணை பாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் விபரங்கள் ஒரிஜினல் ஆர்.சி.புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஹைப்பாத்திகேஷன் நீக்கம்
ஒருவேளை கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி., புத்தகத்தில் ஹைப்பாத்திகேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், விற்பனையாளரிடம் என்.ஓ.சி., சான்றை வைத்து ஆர்.டி.ஒ., அலுவலகத்திலிருந்து ஹைப்பாத்திகேஷனை நீக்கி தர சொல்லுங்கள். ஆர்.சி., புத்தகத்தில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும், காரில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும் ஒன்றாக உள்ளதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.
காரின் வரலாறு
பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில், திருட்டு கார்களை விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, காரின் சர்வீஸ் புத்தகம், டயர் தயாரிப்பு தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து வரலாறை கண்டுபிடித்து விடலாம். காரை பற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு தெரியவில்லையென்றால், நம்பிக்கையான, நன்கு அறிமுகமான மெக்கானிக்கை அழைத்து செல்லுங்கள். அவரை வைத்து மேற்கூறிய அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
கார் டீல்
காரின் கண்டிஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் திருப்தி ஏற்பட்டு, காரை வாங்க முடிவு செய்தபின் விற்பனையாளிரிடம் கார் விலை பற்றி பேரம் பேசுங்கள். காரின் கண்டிஷன் நன்றாக இருந்தால், உங்கள் பட்ஜெட்டைவிட சில ஆயிரங்கள் கூடுதலாக இருந்தாலும் யோசிக்க வேண்டாம்.
பெயர் மாற்றம்
காரை வாங்கும்போதே அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் கையோடு வாங்கி விடுங்கள். மேலும், பழைய உரிமையாளரிடமிருந்து, உங்கள் பெயருக்கு பதிவை மாற்றும் பார்ம்-29, காரை விற்பனை செய்தது மற்றும் வாங்கியதற்கான அத்தாட்சியான பார்ம்-30 ஆகிய ஆவணங்களில் கையெழுத்திட்டு கையோடு வாங்கி கொள்ளுங்கள். ஓல்டு இஸ் கோல்டு...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 days ago |
-
புயல் எச்சரிக்கையால் ஜனாதிபதியின் திருவாரூர் பயணம் ரத்து
30 Nov 2024திருவாரூர் : மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதி திரெளபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
7 மாவட்டங்களில் இன்று 500 மருத்துவ முகாம்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
30 Nov 2024சென்னை : தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
4 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு: மழை நிவாரண நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் : அமைச்சர்கள், கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
30 Nov 2024சென்னை : திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுடன் ஆய்வு நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மழை நிவாரண நட
-
மகராஷ்டிரா: முக்கிய இலாகாக்களை ஒதுக்கக்கோரி பா.ஜ.க.வுக்கு ஷிண்டே தரப்பு திடீர் நிபந்தனை: வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தகவல்
30 Nov 2024மும்பை, முக்கிய இலாகாக்களை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே திடீர் நிபந்தனை விதித்துள்ளார்.
-
சென்னையில் தொடரும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
30 Nov 2024சென்னை, தொடரும் கனமழையை அடுத்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.
-
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: குகேஷ்-லிரென் இடையேயான 6-வது சுற்று இன்று நடக்கிறது
30 Nov 2024கோலாலம்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்றைத் தொடர்ந்து 5-வது சுற்றும் டிராவில் முடிவடைந்த நிலையில் இன்று நடைபெறும் 6-வது சுற்றில் குகேஷ்-லிரென் பலப்பரீட்சை ந
-
முதல் டெஸ்ட் போட்டி: இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி
30 Nov 2024டர்பன் : முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 233 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை: மக்கள் இயல்பு வாழக்கை, ரயில், விமான சேவைகள் பாதிப்பு
30 Nov 2024சென்னை, பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்ககும் கனமழையால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
30 Nov 2024மும்பை : இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு அடிடாஸ் நிறுவனம் சார்பாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
காவல் நிலையம், அதிகாரிகள் மீது தாக்குதல்: மணிப்பூரில் 7 பேர் கைது
30 Nov 2024காக்சிங், மணிப்பூரில் எம்.எல்.ஏ.வின் வீடு உள்ளிட்ட சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவிக்கக்கோரி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இத
-
சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது
30 Nov 2024சென்னை, புயல் காரணமாக சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது.
-
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
30 Nov 2024சென்னை, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அரசு உடனடியாக அக
-
அசாமில் நிலநடுக்கம்
30 Nov 2024திஸ்பூர், அசாமில் ரிக்டர் 2.9 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பஞ்சாப் எல்லை அருகே டிரோன்கள், போதைப்பொருள் பறிமுதல்
30 Nov 2024சண்டிகர், பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் 1.132 கிலோ போதைப்பொருள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
வேகமாக நிரம்பினாலும் செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது : மாவட்ட நிர்வாகம் தகவல்
30 Nov 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தி உள்ள செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்தாலும் பாதுகாப்பாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.