முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு

புதன்கிழமை, 1 மே 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஆவியூரில் கல் குவாரி குடோன் வெடித்து சிதறி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாமல் வெடி பொருட்களை நகர்த்தியதே விபத்திற்கு காரணம் என செய்திகள் வருகின்றன.

கடந்த சில வருடங்களில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 93 பேர் உயிரிழந்ததாக சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான விபத்துகள் நடந்தும் தி.மு.க. அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற தொடர் விபத்துகளும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்புகளும். வெடிபொருள் விபத்துகளை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், இவ்விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து