முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெல்மட்டில் பந்து தாக்கியது: வங்காளதேச கேப்டன் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

வெல்லிங்டன் : ஹெல்மட்டில் பந்து தாக்கியதில் காயமடைந்த வங்கதேச கேப்டன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பந்து தாக்கியது

நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் 5 வது நாளான இன்று வங்காளதேச அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடியது. 43 வது ஓவரில் வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர் ரகீம் ஹெல் மட்டில் பந்து தாக்கியது. நியூசிலாந்து வேகப்பந்து வீரர் சவுத்தி வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டின் பின்பக்கமாக  தாக்கியது. அவரது  தலையின் இடது பகுதியில் பந்து தாக்கியது. இதனால் நிலை குலைந்த  அவர் மைதானத்தில் விழுந்தார் உடனடியாக  மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார்.

நியூசிலாந்து வெற்றி

அவருக்கு அனைத்து வகையான பரிசோதனைகளும்  செய்யப்பட்டன.  பயப்படும்படி  அவருக்கு பிரச்சினை எதுவும் இல்லை. சிகச்சைக்கு பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பினார். ஆனால் களத்தில் இறங்கவில்லை. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டு வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ரன்கள்  குவித்து டிக்ளேர் செய்தது.

ஷகிப்-அல்-ஹசன் இரட்டை சதமும் (217 ரன்கள்), முஷ்பீகுர் ரகீம் சதமும் (159 ரன்கள்) பெற்றுக்கொண்டனர். நியூசிலாந்து அணி சார்பில் நைல் வாக்னர் 4 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சிஸில் விளையாடிய நியூசிலாந்துஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 539 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பில் கம்ருள் இஸ்லாம் ரப்பி 3 விக்கெட்டுகளையும், சுபாஷிஸ் ராய், ஷகிப்-அல்-ஹசன், மஹ்முதுல்லாஹ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹமட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வில்லியஸ் சிறப்பான ஆட்டம்

வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள்  மாத்திரமே பெற்றுக்கொண்டது. ட்ரென்ட் போல்ட் மூன்று விக்கெட்டுகளையும், நைல் வாக்னர், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 217 ரன்ங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின்(104 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் இலகுவாக வெற்றியை தட்டிச் சென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்