முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தமுக்கம் மைதானத்தில் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்காட்சி--

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை, - புதிய வகையான வேளாண் வழியில் வந்த விளைச்சல் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியம் மற்றும் நற்சத்துகளை தினசரி வாழ்வில் ஒரு நடைமுறை யாகக் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியோடு மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் உணவுத் தொழில்நுட்ப கண்காட்சி 2017, மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து திங்கட்கிழமை வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் மதுரை சிறு மற்றும் குறு தொழில் புரிவோர் சங்கம் (மடீட்சியா) உடன் கைகோர்த்து "உணவுத் தொழில்நுட்பம் 2017" என்ற பெயரில் பெரிய அளவில் ஒரு கண்காட்சியை நடத்தப்படுகிறது.

முன்னதாக இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் ராம் ராஜசேகரன் (மைசூரூ) நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், தேசிய அளவில் உணவு ஆராய்ச்சி, உணவின் மீதான தொழில்நுட்பம், தேர்ந்த சத்துகள், சிறந்த உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலை செய்து வருகிறது. இந்திய மக்கள்தொகை தற்போது ஊட்டச்சத்து கொண்ட உணவுகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நீரிழிவு, இருதய நோய்கள், உடற்பருமன் ஆகியவை இந்த ஊட்டச்சத்தின் குறைவு காரணமாகவே மக்களுக்கு ஏற்படுகின்றன.

இதற்கானதொரு சீரிய தீர்வாக சிஎஸ்ஐஆர் உடன் இணைந்து இந்திய மக்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தர திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த வகையான உணவுகளால் நாட்டு மக்களின் ஆரோக்கியம் மேம்படும். சியா மற்றும் க்யூனோவா ஆகியவற்றை  ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளுக்காக தனியே இவர்களால் வேளாண்மை செய்யப்படுகிறது. ஒமேகா3 இல் சிறந்த சியா தாவரங்களில் இருக்கும் நல்ல கொழுப்பினைத் தரக்கூடிய க்யூனோவா நல்ல புரதம் மற்றும் கார்போ ஹைட்ரைடுகளைக் கொண்டது. இவ்விரண்டும் மக்களின் நோயினைத் தீர்ப்பதோடு மக்கட்தொகையினையும் ஆரோக்கியமான ஒன்றாக மாற்றுகிறது.

இந்தக் கண்காட்சியில் புதிய வகையான உணவுப்பொருட்களான ஒமேகா 3 மற்றும் புரதம் நிறைந்த சாக்லெட் பார்கள் மற்றும் க்யூனோவா லட்டுகள் ஆகியவையும், இந்தியாவின் முதல் பழரச் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 20% பழச்சாறு அடங்கிய நியூட்ரில்ஸ் மற்றும் ஒமேகா கொழுப்பு நிறைந்த பனிக்கூழ், டியாக்ளிசரால் எண்ணெய் (உடற்பருமனுக்கு எதிராக செயல்படும்) ஆகியவற்றை தினசரி நடைமுறைப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் நேரடி விளக்கம் தருவதற்காக நகரும் சமையல் கூடங்களைக் கொண்டு பழச்சாறுடைய மென்பானத் தயாரிப்பு முறையை விளக்குகிறது.அதுமட்டுமன்றி கோக்கு ஜெல்லி, வாழைப்பழ பார், வறுக்கப்பட்ட சியா, ஊதப்பட்ட க்யுனோவா, சியா க்யூனோவா சாக்கோ பார், நியூட்ரி டிக்கி, சியா குக்கீ, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி முரப்பான் ஆகிய பல பொருட்களை படைக்கிறது, என்றார்.

மேலும் அவர் கூறுகையில், புதிய வகையான புதுமையான தொழில்நுட்பம் கொண்ட இந்த உணவுகளை இந்த 2017 கண்காட்சியகத்தில் உங்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம். இதற்கான மடீட்சியாவின் உழைப்பு அளப்பிடற்கரியது. இந்திய மக்கட்தொகையின் ஆரோக்கியத்தினை கருத்திற்கொண்டு செய்வதால் இந்திய சிறு மற்றும் குறு தொழிலும் இது குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை அளிக்குமென நம்புகிறோம், என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்