முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

 ஓசூர் அருகே பாகலூரில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

ஓசூர் அருகே பாகலூரில் கிராம தேவதை மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கும் மேலானதாகும். இது மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அது போல் இந்த ஆண்டு தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 29&ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம், சிறப்பு யாகங்கள் நடைபெற்றுது. தேர்கட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. பாகலூர் கோட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் முன்புறம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில், அம்மனை மேள,தாள முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் வைத்தனர். முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், பெண்கள் ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு மாவிளக்கு ஆரத்தி காண்பித்து வழிபட்டார்கள். விழாவில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்து அன்னாதான நிகழ்ச்சியும் துவக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என்னும் பக்தி கோஷம் எழுப்பியவாறு தேரை இழுத்து சென்றார்கள். இதில், ஓசூர் ஒன்றிய அ.தி.மு.க.(அம்மா) செயலாளர் ஜெயராமன், பாகலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் முரளிகுமார் பாபு, மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், முன்னாள் ஓசூர் நகராட்சி கவுன்சிலர் வாசுதேவன்..உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.தேர்த்திருவிழாவில், பாகலூர், ஓசூர், பேரிகை, சம்பங்கிரி, மாலூர், சர்ஜாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய அம்சமாக, தேர் புறப்படும் நேரத்தில், ஹெலிகாப்டர் மூலம் தேர் மீது மலர் தூவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையட்டி, ஹெலிகாப்டர் வானில் 3 முறை வட்டமிட்டவாறு தேர் மீது பூக்களை பொழிந்தது. விழாவையட்டி பாகலூரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவின் அடுத்த நிகழ்ச்சிகளாக இன்று இரவு பக்தி நாடகம் மற்றும் இன்னிசை கச்சேரியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு வாணவேடிக்கைகளுடன் பல்லக்கு உற்சவமும் நடைபெறுகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்