முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஜேடர்பாளையம் அணைக்கட்டுப் பகுதியில் அமைக்கப்;பட்டு வரும் புதிய குடிநீர் திட்டப்பணிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்காக நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அணைக்கட்டு அருகில் காவிரி ஆற்றின் ஓரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமையில் இன்று (21.04.2017) சிறப்பு செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி மற்றும் ஆர்.புதுப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகள் மற்றும் 1081 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் 2 ஆம் கட்டப்பணி ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2 நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2 பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. இக்குடிநீர்த்திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டு நீர் வளம் குறைந்து விட்டது. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசியக் தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் முனைப்போடு பணியாற்றி வருகின்றது. மேலும் தமிழக அரசு மாநில வறட்சி நிவாரண நிதியிலிருந்து ஏறத்தாழ ரூ.4.18 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்நிதியின் மூலம் ஏறத்தாழ 77 குடிநீர்த்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   மேலும் நகராட்சிகளின் சார்பில் மாநில வறட்சி நிவாரண நிதியிலிருந்து ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் 3 குடிநீர்ப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பேரூராட்சிகளில் ரூ.65.60 இலட்சம் மதிப்பீட்டில் 29 குடிநீர்ப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் 24 குடிநீர்ப்பணிகள் எடுக்கப்பட்டு ரூ.4.70 இலட்சம் மதிப்பீட்டில் 3 குடிநீர்ப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ.95.50 இலட்சம் மதிப்பீட்டில் 21 குடிநீர் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மாநில வறட்சி நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் 21 குடிநீர்ப்பணிகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகராட்சிகளில் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் 3 குடிநீர்ப்பணிகளும், பேரூராட்சிகளின் சார்பில் ரூ.65.60 இலட்சம் மதிப்பீட்டில் 29 குடிநீர்ப்பணிகளும், 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் 24 குடிநீர்ப்பணிகளும் என மொத்தம் ரூ.4.18 கோடி மதிப்பீட்டில் 77 குடிநீர்ப்பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் 46 குடிநீர்ப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 31 குடிநீர்ப்பணிகள் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. மக்களின் குடிநீர் தேவைகளுக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு குடிநீர்ப்பணிகளை செயல்படுத்தி வருகின்றது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட முன்வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தெரிவித்தார்.  இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர்கள் என்.ஆர்.தங்கவேல், கே.கார்;த்திகேயன், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.எஸ்.பாலமுருகன், எம்.பாலமுருகன், உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள்  மாதேஸ்வரன், முருகேசன், உட்பட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்