முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் பி.எம்.நரசிம்மன் ஆய்வு

புதன்கிழமை, 24 மே 2017      தேனி
Image Unavailable

 தேனி.- தேனி மாவட்டம், தேனி வட்டத்திற்குட்பட்ட கருவேல்நாயக்கன்பட்டியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேனி-அல்லிநகரம் நகராட்சி - கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், க.விலக்கில் சமூக நலத்துறையின் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட வைகை அணையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தேனி-அல்லிநகரம் நகராட்சி புதிய குடிநீர் அபிவிருத்திதிட்டப்பணி, ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை, கண்டமனூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, தேனி வட்டத்திற்குட்பட்ட தப்புக்குண்டு கிராமத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்ற தேனி-அல்லிநகரம் நகராட்சி - திடக்கழிவு மேலாண்மை மையம், வீரபாண்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து (23.05.2017)  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் பி.எம்.நரசிம்மன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
 அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) ஆகிய துறைகளின் கீழ் திட்டங்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் காலவரையரை, அதன்பயன், அத்திட்ட செயல் முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை ஆகியன குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் பி.எம்.நரசிம்மன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், 15-ஆம் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தேனி மாவட்டத்தினை இரண்டாம் மாவட்டமாக தேர்வு செய்து ஆய்வு செய்து வருகிறது. மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் அளித்த வாக்குறுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
 சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழுவானது தமிழக அரசிற்கும் பொது மக்களுக்கும் பாலமாக இருந்து வருகிறது. வருடந்தோறும் துறை வாரியாக ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதாக உள்ளதா என்பதனை இக்குழு ஆய்வு செய்கிறது. இக்குழு உறுப்பினர்கள் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி வருகிறார்கள். தமிழக அரசு எண்ணற்ற மக்கள் சார்ந்த நலத்திட்டங்களை அறிவித்து ஏழை, எளிய மக்களுக்கு வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தப்பட்டு வருகிறது எனத்தெரிவித்தார்.
மேலும், ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களையும், மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.3,386- வீதம் ரூ.10,158- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், விலையில்லா தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4,235- வீதம் ரூ.8,470- மதிப்பிலான தேய்ப்பு பெட்டியினையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.2,53,750- நிதியினையும், சமூகநலத்துறையின் சார்பில் விலையிலலா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.3,386- வீதம் ரூ.27,088- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,00,000-த்திற்கான சுழல் நிதியினையும், பேரூராட்சித்துறையின் சார்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 43 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் பி.எம்.நரசிம்மன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் (சட்டமன்ற உறுப்பினர்கள்) எஸ்.ஆர்.ராஜா கனகராஜ் கே.பி.பி.சாமி எஸ்.சுதர்சனம் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் மரு.வி.பி.பி.பரமசிவம் கே.பி.பி.பாஸ்கர் திருமதி.பி.மனோன்மணி எஸ்.ராஜேஸ்குமார் திருமதி.சி.ஜெயந்தி பத்மநாபன் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் எஸ்.டி.கே.ஜக்கையன் தமிழ்நாடு சட்டப்பேவை சார்புச்செயலாளர் ராஜேந்திரன் துணைச் செயலாளர் ரமேஷ் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன் வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன் அவர்க்ள், திருமதி.ஆனந்தி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா மாவட்;ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.கிருஷ்ணவேனி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி.ராஜராஜேஸ்வரி   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்