முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் லல்லு குடும்பத்தின் 12 சொத்துகள் முடக்கம்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா, லல்லு குடும்பத்தினர் பினாமி சொத்துகளை வாங்கி குவித் திருப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த மாதம் வருமான வரித் துறையினர் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். முன்னதாக லல்லு குடும்பத்தினரோடு தொடர்புடைய ஆடிட்டர் ராஜேஷ் குமார் அகர்வால் கைது செய்யப்பட்டார்.

7 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு

இந்நிலையில் பிகார் தலைநகர் பாட்னா, டெல்லியில் உள்ள லல்லு குடும்பத்தினருக்கு சொந்தமான 12 சொத்துகள் நேற்றுமுன்தினம் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லல்லுவின் மகள் மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ், மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் லல்லுவின் மகள்கள் சண்டா, ராகினி ஆகியோருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து