முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் செல்ல 29 நிமிடங்கள் எலன் மஸ்கின் ஹைப்பர் லூப் திட்டத்திற்கு அனுமதி

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க்(யு.எஸ்):  டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனர் எலன் மஸ்க்கின் புதிய போக்குவரத்து திட்டமான ஹைப்பர் லூப் மூலம் நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் டிசிக்கு 29 நிமிடத்தில் வந்து விடலாம். இது விமானப் பயண நேரத்தை விட குறைவானதாகும்.

எலன் மஸ்கின் கனவுத் திட்டமான ஹைப்பர் லூப் சோதனைத் திட்டம் கலிஃபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. சான் ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை இணைக்கும் இந்த திட்டத்திற்கு ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹைப்பர் லூப் திட்டத்தை ஏனைய நாடுகளிலும், ஏனைய அமெரிக்க நகரங்களிலும் விரிவு படுத்த எலன் மஸ்க் முயற்சிகள் எடுத்து வருகிறார்.

நியூயார்க் - பிலடெல்பியா- பால்டிமோர் - வாஷிங்டன் டிசி வழித்தடத்தில் தரைக்கு அடியில் ஹைப்பர் லூப் திட்டம் அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் வாய்மொழி ஒப்புதல் கொடுத்துள்ளதாக எலன் மஸ்க் கூறியுள்ளார்.

இன்னும் நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது. திட்டமிடுதல் தேவைப்படுகிறது. முறைப்படி அனுமதி விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் மஸ்க் கூறியுள்ளார்.

மினி வேன் சைஸில் உள்ள பயணிகள் இருக்கைகள் கொண்ட விண்வெளி கேப்சூல் போன்ற வாகனத்தை, காற்றுவெளி இல்லாத பெரிய ட்யூப்க்குள் விரைவாக அனுப்புவது தான் ஹைப்பர் லூப் திட்டமாகும். இதற்காக தி போரிங் கம்பெனி என்ற தனி நிறுவனத்தை எலன் மஸ்க் நிறுவியுள்ளார்.

இந்தியாவிலும் ஹைப்பர் லூப் திட்டம் பற்றி ஆலோசனைகள் நடந்து வருகிறது. தி போரிங் கம்பெனி நிர்வாகிகள் மத்திய மாநில அரசுகளுடன் கலந்து பேசி வருகிறார்கள். மும்பை - பெங்களூர்- சென்னை - கொல்கத்தா வழித்தடம் உட்பட ஆராயப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து