முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயிலில் தங்கத்தேர் மகா கும்பாபிஷேக விழா-பக்தர்கள் பரவசம்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல். - திண்டுக்கல் அருள்மிகு நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயிலில் தங்கத்தேர் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
ஆசிய கண்டத்திலேயே எங்கும் இல்லாத வண்ணம் ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட 32 அடி உயரமுள்ள அருள்மிகு மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் திருக்கோயில் திண்டுக்கல் கோபால சமுத்திர கரையில் உள்ளது. மேலும் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலும் பக்தர்களுக்குகாட்சியளித்து அருள்பாலித்து வருவதால் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் முத்தாய்ப்பாக அருள்மிகு நன்மை தரும் தங்கவிநாயகருக்கு புதிய தங்கத்தேர் அமைக்க உத்தேசிக்கப்பட்ட அதன் திருப்பணிகள் தொடங்கின. பணிகள் அனைத்தும் நிறைவுற்றதையடுத்து 16 அடி உயரமுள்ள தங்கத்தேருக்கு மகா கும்பாபிஷேக விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தங்கதேர் வெள்ளோட்டமும் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணியளவில் கணபதி ஹோமம், 2ம் கால யாக ஞீஜை தொடக்கம், ஜெப ஹோமம், ஸ்பர்ஷாஹ$தி, பிம்பசுத்தி, ரக்சாபந்தனம், ஞீர்ணாஹ$தி, கலசங்கள் ஞான உலா, தங்கத்தேர் விமான மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பெண்கள் பெருமளவில் பால்குடம் எடுத்து வந்தனர். பகல் 12 மணியளவில் விநாயகருக்கு 16 வகையான அபிஷேகமும் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் விநாயகர் தங்கத்தேரில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டவுன் டி.எஸ்.பி.சிகாமணி, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் செழியன், ஆடிட்டர் ராமலிங்கம், தொழிலதிபர் பி.எம்.எஸ்.முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாக அறங்காவலர் மருதநாயகம் சிறப்புற செய்திருந்தார்.
வருகிற விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு மகா அபிஷேகமும், தங்கத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து