முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார்: கமல்ஹாசன்

சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை : அரசியலில் ரஜினியுடன் இனைத்து செயல்படத் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற ஒரு நாளிதழ் விழாவில் பங்கேற்றுப் நடிகர் கமலஹாசன் பேசிய போது நடிகர் ரஜினிகாந்திற்கும், எனக்கும் தொழில் ரீதியிலான போட்டி இருந்தாலும், முக்கிய பிரச்சினைகளில், இருவரும், ஒருவரையொருவர் சந்தித்து ஆலோசிப்பது வழக்கம் என்றார்.அரசியல் களத்தில் நுழைந்த பிறகு, ரஜினி ஆசைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவருடன் இணைந்து செயல்பட தயார் என்றும் கமல்ஹாசன் கூறினார். அரசியல் குறித்து இப்போது பேசினால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஏன் பேசவில்லை என்ற கேள்வி தன் முன் வைக்கப்படுவதாகவும், அப்போது, ஊரே பேசவில்லை என்பதால், ஊரோடு கூடி வாழ்ந்த தாமும் பேசவில்லை என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இனிமேலும் அரசியல் பேசாமல் இருப்பது நல்லது இல்லை என்ற அடிப்படியிலேயே, கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து