முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸை அடுத்து டெம்பின் புயல் வியட்நாமை நோக்கி நகர்ந்தது

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

மணிலா :  பிலிப்பைன்ஸை அடுத்து டெம்பின் புயல் வியட்நாமை நோக்கிச் சென்றுள்ளது. அங்கு டெம்பின் வலுவற்ற நிலையில் காணப்படுவதால் வியட்நாமில் இந்தப் புயலால் சேசதங்கள் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக பிலிப்பைன்ஸை புரட்டி சென்ற டெம்பின் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து பிலிம்பைன்ஸ் ஊடகம் தரப்பில், ''பிலிப்பைன்ஸில் எல் சால்வடார், மிண்டானோ தீவுப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை டெம்பின் புயல் தாக்கியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

சுமார் 70,000பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் பாலங்கள் உடைத்து சேதம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை டெம்பின் புயலுக்கு 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போகியுள்ளனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸை அடுத்து டெம்பின் புயல் வியட்நாமை நோக்கிச் சென்றுள்ளது. அங்கு டெம்பின் வலுவற்ற நிலையில் காணப்படுவதால் வியட்நாமில் இந்தப் புயலால் சேசதங்கள் இருக்காது என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து