முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பயிற்சி குறுந்தகடு கையேடுகளை வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      தேனி

  தேனி- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சேவா சங்கத்தின் கௌரவ தலைவர் சி.சரவணன் மற்றும் நிர்வாகிகளின் முயற்சியில் இச்சங்கமும், தேனி திண்ணை மனிதவள மேம்பாட்டு கழகமும் இணைந்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 4க்கான தேர்வர்களுக்கு இலவச பயிற்சி முகாமை பெரியகுளம் எட்வர்டு நினைவு நடுநிலைபள்ளியில்  நடத்தி வருகிறது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.  நேற்று இம்முகாமில் தேர்வர்களுக்கான பயிற்சி குறுந்தகடு மற்றும் கையேடுகளை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மனித வள மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். இக்கழக தலைவர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் தலைமையேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தேர்வர்களுக்கு பயிற்சிக்கான குறுந்தகடுகள் மற்றும் கையேடுகளை வழங்கி சிறப்பித்தார். அவர் பேசும்போது புரட்சிக்கவிஞர் பாரதியார் அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தல், ஆலயம் தொழுதலை விட எழுத்தறிவித்தலே சிறந்த தொண்டு என்றார். அவரின் வைர வரிகளுக்கு ஏற்ப ஒரு சிறப்பான பணியை இச்சங்கங்கள் தற்போது ஏற்படுத்தியிருக்கின்றன. அ என்பது உயிர் எழுத்து, ம் என்பது மெய் எழுத்து, மா என்பது உயிர்மெய் எழுத்து இம்மூன்றையும் சேர்த்து அம்மா என்பதில் அகிலமும் அடங்கிவிடும் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் கல்வித்துறைக்காக 24 ஆயிரம் கோடியை ஒதுக்கி ஆரம்பக்கல்வி, உயர்கல்விக்காக  மாணவ மாணவிகளுக்கு 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி கல்வித்தாயாக திகழ்ந்தார். மேலும் தமிழகத்தை கல்வித்துறையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உருவாக்கினார். சாதனையாளர், வெற்றியாளர், பார்வையாளர் என மனிதனை மூன்று வகையாக பிரிக்கலாம். தன்னைத்தானே செதுக்கி கொண்டு வெற்றி பெறுபவர் சாதனையாளர். இவரை எல்லோரும் கொண்டாடுவர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது லட்சியத்தை அடைபவர் வெற்றியாளர். இவரை எல்லோரும் நேசிப்பர். மற்றவர்களை குறைகூறி கொண்டிருப்பவர்கள் பார்வையாளர். இவரை எல்லோரும் புறக்கணிப்பர். நாம் நம்மீது நம்பிக்கை வைத்து விடா முயற்சியுடன் கடின உழைப்பு மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் நம்வசமாகும் என்றார். மேலும்  தானும் இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்ததை நினைவு கூர்;ந்தார். தான் படிக்கும்போது அட்லாஸ்  என்னும் வரைபடங்களை வாங்க வசதி இல்லாததால்,  வசதி படைத்த மாணவர்களிடமிருந்து வரைபடங்களை பெற்று  அதை பேப்பர் வாங்கி தலையிலிருக்கும் எண்ணையில் தடவி வரைபடங்கள் மீது வைத்து அவுட்லைன் வரைந்து படித்ததை நினைவு கூர்ந்தார்.  சீனபழமொழியான பசித்தவனுக்கு மீனை தருவதை விட, மீன் பிடிக்க கற்றுத்தர வேண்டும் என்பது போல உங்களின் வாழ்வாதாரம் சிறக்க ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சேவா சங்கமும் மற்றும் திண்ணை மனிதவள மேம்பாட்டு கழகமும் இணைந்த சிறப்பான பணியை செய்து வருகின்றனர். இவர்களின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் நீங்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். மீண்டும் உங்களை  சந்திக்கும்போது தமிழக அரசின் ஏதாவது ஒரு துறையில் அரசு பணி ஆற்றுபவர்களாக பார்க்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். மேலும் அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டி தேர்வுகளுக்கான நூலகத்தையும் பார்;வையிட்டார். இவ்விழாவில் வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி அரசியல் பிரவேசம் மற்றும் தேர்தலில்  தனித்து நின்று அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தது குறித்து கேட்டபோது ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலில் ஈடுபடலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து