முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாக். அரசு முடிவு

திங்கட்கிழமை, 21 மே 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரத்தையும்,நிதியுதவியையும் அளிப்பதற்கு பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டம், பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திட்டக் குழுவின் துணைத் தலைவர் சர்தாஜ் அஜீஸ், உள்துறை அமைச்சர் அஷன் இக்பால், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்டிஸ்தான் அரசுகளுக்கு கூடுதலாக நிதி, நிர்வாக அதிகாரத்தை வழங்குவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. எனினும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எனினும், பாகிஸ்தானின் இதர பகுதிகளைப் போன்று கில்ஜித்-பல்டிஸ்தானும் வளர்ச்சி அடைவதற்காக, அந்தப் பகுதிக்கு 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிப்பற்கு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து