முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு ஆதரவு கோரி கபில் தேவை சந்தித்தார் அமித்ஷா

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பா.ஜ.க.வுக்கு ஆதரவு கோரி
கபில் தேவை சந்தித்தார் அமித்ஷா
புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவை சந்தித்து அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்குமாறு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கோரினார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: கபில்தேவையும், அவரது குடும்பத்தினரையும் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். இந்தச் சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்தது. பா.ஜ.க.வுக்கு ஆதரவு கோரும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளேன். அதன் ஒரு பகுதியாக கபில் தேவை சந்தித்து, கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை எடுத்துரைத்தேன் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு லட்சம் பேரை சந்தித்து ஆதரவு திரட்ட பா.ஜ.க.  முடிவு செய்துள்ளது. முன்னதாக, ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக்கையும் அமித்ஷா சந்தித்து சாதனைகளை விளக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து