முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாஸாவின் விண்வெளி பயணம் சுனிதா வில்லியம்ஸ் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாஸா, முதல் முறையாக அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் வர்த்தக ரீதியிலான விண்வெளிப் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ள 9 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்சும் இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து நாஸா அதிகாரிகள் கூறியதாவது:-

எதிர்காலத்தில் நாஸாவின் வர்த்தக ரீதியிலான விண்வெளி ஆய்வுக் கலங்கள் அனைத்தும், ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் போயிங் ஸ்பேஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்ணில் ஏவப்படும். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், போயிங் சி.எஸ்.டி-100 ஸ்டார்லைனர் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூல் மூலம் 8 நாஸா விஞ்ஞானிகளும், நாஸாவில் பணியாற்றி விட்டு தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரும் விண்வெளிப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த 9 பேரில் சுனிதா வில்லியம்சும் ஒருவர்.

அடுத்த ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க மண்ணிலிருந்தே விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்ப முடியும்.

விண்வெளி ஆய்வுத் துறையில் அமெரிக்காவின் முன்னிலையைத் தக்க வைக்க இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என்று நாஸா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து