முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமி மனைவியை எதிர்த்து களமிறங்கிய கர்நாடக பா.ஜ.க. வேட்பாளர் காங்கிரசில் இணைந்தார்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடகாவில் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளார் பாஜக வேட்பாளர் எல்.சந்திரசேகர். இவர் 20 நாட்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்துள்ளார்.

ராமநகரம் சட்டசபை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.சந்திரசேகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் மீண்டும் காங்கிரஸ் திரும்புவதாகவும் அறிவித்துள்ளார். நாளை 3-ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது கர்நாடக பா.ஜ.க.வுக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இவர் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியும் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளருமான அனிதா குமாரசாமிக்கு எதிராகப் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான சி.எம்.லிங்கப்பாவின் மகனான சந்திரசேகர், கடந்த அக்டோபர் 10-ம் தேதி காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு அனிதா குமாரசாமியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மூத்த பா.ஜ.க. தலைவர்கள் இடையே சந்திரசேகருக்கு முரண்பாடு இருந்து வந்த நிலையில் வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து