முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். சிறையிலிருந்து விடுதலையான இந்தியர் இன்று நாடு திரும்புகிறார்?

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், சட்ட விரோதமாக நுழைந்ததாகவும், உளவாளி எனக்கூறி பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்தியர் ஒருவர், விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ஹமீத் அன்சாரி. இவருக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்குவா மாகாணத்தின் கோஹட் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். கடந்த 2012-ல் அவரை பார்ப்பதற்காக அன்சாரி, ஆப்கன் வழியாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.

இதனையடுத்து அவர் சட்டவிரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாக பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலி ஆவணங்கள் மூலம் அவர் வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 2015-ல் பாகிஸ்தான் ராணுவ கோர்ட், அன்சாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து அவரை பெஷாவர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். சிறையில், பலமுறை கைதிகளால் அன்சாரி கடுமையாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக 2016-ல் அன்சாரி வழக்கறிஞர் கோர்ட்டில் புகார் தெரிவித்தார். அவரது தண்டனை காலம் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும் அவரை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து அன்சாரி வழக்கறிஞர் பெஷாவர் ஐகோர்ட்டில் முறையிட்டார். அவரை விடுதலை செய்யவும், நாடு கடத்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார். ஆவணங்கள் இன்னும் தயாராகாத காரணத்தினால், அன்சாரியை நாடு கடத்தும் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஐகோர்ட், அன்சாரியை விடுதலை செய்து ஒரு மாதத்திற்குள் நாடு கடத்த வேண்டும் என கெடுவிதித்தது. இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக அன்சாரி, விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வாகா அட்டாரி எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து