முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்க்கை என்பது வீடியோ கேம் அல்ல: மாணவர்களுக்கு திண்டுக்கல் டி.ஐ.ஜி. அறிவுரை

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      தேனி
Image Unavailable

 போடி,-   வாழ்க்கை என்பது வீடியோ கேம் அல்ல, மாணவர்கள் வீடியோ கேம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என போடி ஜ.கா. நி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் திண்டுக்கல் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் அறிவுரை வழங்கினார்.
     போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியின் 113-114 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் ஜோஷி நிர்மல் குமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், 114 ஆண்டுகள் முதிர்ந்த பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம். மாணவ, மாணவிகள் தற்போது வீடியோ கேம் விளையாடுவதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
     இது தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பது வீடியோ கேம் அல்ல. வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது. தினமும் பாடங்களை தவறாமல் படிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். பொது அறிவினை வளர்த்து வாழ்க்கையை வளமாக்க கல்வியை கவனமுடன் படிக்க வேண்டும் என்றார்.
     பள்ளி தலைவர் வடமலைராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.  தேனி முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட கல்வி அலுலர் கணேஷ் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் அழகுகுமார், கமால்தீன், ஞானம், சரவணன், வடமுலு, மாரிமுத்து, காளிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், கல்வி நன்கொடைகள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் குமார் வரவேற்றார். கூடுதல் உதவி தலைமையாசிரியர் முருகேசன் நன்றி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து