முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை: இம்ரான் கான்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்ட பிரிவை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியின் முடிந்தன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பல்வேறு நாடுகள் கூறி உள்ளன. ஆனால் பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கையை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே இந்தியா அவ்வாறு கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து