முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயல்படாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், மாவட்டத்தில் செயல்படாத நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலெக்டர்  பேசியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே கனமழை சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.    எளிதில் மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ளதாக 39 பகுதிகளில் கண்டறியப்பட்டன.  இப்பகுதிகளில் மழைநீர் எளிதில் வடிந்தோட ஏதுவாக தற்காலிக கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் அனைத்தும் 15 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன.  அதேபோல அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 இந்நிலையில், கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஒருசில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.  அதனை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு சார்ந்த அலுவலர் குழுக்கள் மூலமாக உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் நடப்பு (நவம்பர்) மாதத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு அலுவலர்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.
 இவ்வாறு தேங்கும் மழைநீரை தற்கால வடிகால் அமைத்து அருகிலுள்ள கண்மாய்ஃஊரணிஃகுளங்களில் சேமித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழுள்ள கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் உள்ள தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.  நீர்நிலைகளது கரைகளின் தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து உடைப்பு ஏற்படாமல் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அதே வேளையில் அவசர சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக போதிய அளவு மணல் மூட்டைகள், சவுக்கு மரங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து அவற்றில் செயல்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும்.  குறிப்பாக வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைஃவேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்ந்த அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய் வட்டங்கள் வாரியாகவும், ஊராட்சிகள் வாரியாகவும் சமர்ப்பித்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ப.மு.முருகேசன், ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்திரன்,  இணை இயக்குநர் வேளாண்மை துறை சொர்ணமாணிக்கம், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஆரோக்கியராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.எஸ்.சேக்அப்துல்லா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சாமிராஜ்  உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து