முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடகி லதா மங்கேஷ்கரை சந்தித்து நலம் விசாரித்தார் உத்தவ் தாக்கரே

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மராட்டிய மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உத்தவ் தாகரே, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மும்பை ப்ரீச் காண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். லதா மங்கேஷ்கருக்கு இன்டென்ஸிவிஸ்ட் எனப்படும் தீவிர சிகிச்சை நிபுணரான பரூக் இ உத்வாடியா சிகிச்சை அளித்து வந்தார். நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் அவரது உடல்நிலை தேறியது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணமடைய மேலும் சில நாட்கள் ஆகலாம் என்பதால் கண்காணிப்பிலேயே வைத்திருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரை மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று நலம் விசாரித்தார். லதா மங்கேஷ்கர் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் 30,000-க்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 2001-ல் அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து