முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ராணுவ விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் - தலிபான்கள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காஜினி மாகாணத்தின் தேயாக் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்பு விமானம் நொறுங்கி கிடந்தது. விமானம் நொறுங்கி கிடந்த இடம் தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். இந்த விமானத்தில் அமெரிக்க உளவுப்படையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இருந்தனர். விமானம் நொறுங்கியதில் 9 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவ விமானம் நொறுங்கி விழுந்ததற்கு தலிபான்கள் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்க போர் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜுபை துல்லா முஜாகித் கூறியதாவது:-

அமெரிக்க சிறப்பு விமானம் எங்களது கட்டுப்பாட்டில் பறந்து சென்றது. இந்த விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம். இதில் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் உயர் அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர் வாட்ஸ்அப் செய்தி மூலம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் தங்களது விமானம் தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும் போது, விமானம் நொறுங்கி விழுந்தது தொடர்பாக நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து