முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ்: மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவிய டென்னிஸ் வீராங்கனை

புதன்கிழமை, 18 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

ருமேனியா : ருமேனியா டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த மக்களை காப்பாற்றும் வகையில் மருத்துவ உபகரணங்கள் வாங்க பணம் வழங்கி உதவியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டியுள்ளது. ருமேனியாவில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சிமோனா ஹாலெப் மருத்துவ உபகரணங்கள் வாங்க பண உதவி செய்ததாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சிமோனா ஹாலெப் தனது பேஸ்புக் பக்கத்தில் துரதிருஷ்டவசமாக, நாம் கடினமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். சில மாதங்களுக்கு முன் இப்படி ஒரு கட்டத்தை எட்டுவோம் என்று நினைதுக்கூட பார்த்திருக்கமாட்டோம்.மற்றொரு பக்கம், நம்முடைய மற்றும் நம்மை சுற்றி இருப்பவர்களின் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கான பொறுப்பு உள்ளது. அதற்கு ஆதரவாக இருப்பதற்கு இது சரியான வாய்ப்பு. நாம் வீட்டில் இருந்து கொண்டிருக்கும் வேளையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஒவ்வொரு உயிர்களையும் காப்பாற்ற மிகப்பெரிய அளவில் தங்களை ஈடுபத்தி வருகிறார்கள்.அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவும். இந்த பங்களிப்பை மிகப்பெரிய அளவிலான பேரழிவில் இருந்து பாதுகாக்க உதவும். அனைத்து நடவடிக்கைகளையும் தானாகவே எடுத்துக் கொண்டு பொறுப்புடனம், நேர்மறையாகவும் இருப்போம். கடவுள் துணை நிற்பார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து