முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருவூலத்துறையில் இளநிலை உதவியாளர்கள் 12 பேருக்கு பணி நியமன ஆணைகள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (03.08.2020) நிதித்துறையின் கீழ்செயல்படும் கருவூலம் மற்றும் கணக்குத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 114 இளநிலை உதவியாளர்களில் 12 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கினார். 

கருவூலம் மற்றும் கணக்குத்துறை 01.04.1962-ல் தோற்றுவிக்கப்பட்டு நிதித்துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கி வருகின்றது.  இத்துறையில் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள மொத்தம் 5078 பணியிடங்களில் தற்போது 3422 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவற்றில் கணக்கர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் ஆகிய பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றன.

கருவூலம் மற்றும் கணக்குத்துறையில் 2018 - 2019  மற்றும் 2019 - 2020ஆம் ஆண்டுகளுக்கென 114 இளநிலை உதவியாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக அவர்களில் 12 நபர்களுக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பணிநியமன ஆணைகளை நேற்று (03.08.2020) தலைமைச் செயலகத்தில் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், கருவூலக் கணக்குத்துறை ஆணையர் சமயமூர்த்தி, கூடுதல் இயக்குநர் சித்ரா ஜான் பெர்னாண்டோ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து