முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 1,260 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2022      இந்தியா
Corona 2022 02 02

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் புதிதாக 1,260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முந்தின நாள் பாதிப்பு 1,335 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று குறைந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,404 பேர் நலம்பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 92 ஆயிரத்து 326 ஆக உயர்ந்தது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 83 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 79 அடங்கும். 

இதுதவிர மகாராஷ்டிராவில் 2 பேரும், உத்தரபிரதேசம், டெல்லியில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,21,264 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,404 பேர் நலம்பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 92 ஆயிரத்து 326 ஆக உயர்ந்தது. தற்போது 13,445 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று 18,38,552 டோஸ்களும், இதுவரை 184 கோடியே 52 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து