முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்டு, கோவாக்சின் விலை ரூ.225 ஆக குறைப்பு

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2022      இந்தியா
Covaxin 2022 04 03

Source: provided

புதுடெல்லி : தனியார் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி 2-வது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். இந்தப் பணியானது இன்று முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் மருத்துமனைகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலையை ரூ.225 ஆக குறைத்து சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனையின்படி தனியார் மருத்துமனைகளுக்கான தடுப்பூசியின் விலை ரூ.600-ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதைபோன்று பாரத் பயோ டெக் நிறுவனமும் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.225 ஆக குறைந்துள்ளது. எனவே, இன்று முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ரூ.225 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து